உக்ரைன் ராணுவ விமானத்தளங்களை அழித்த ரஷ்யா! என்னாகுமோ என்ற பதற்றத்தில் மக்கள்?
பலரும் எதிர்பார்க்காத விதமாக இன்று காலை உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது. அதுவும் குறிப்பாக உக்ரைன் நாட்டின் விமான தளங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படை தீவிரமாக ஈடுபட்டது.
இதனால் குடியிருப்பு பகுதிகளை தாக்கவில்லை என்றும் ரஷ்யா விளக்கம் அளித்திருந்தது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டு விமானத் தளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உக்ரைன் நாட்டு ராணுவ விமானத் தளங்களை அழித்து விட்டதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது.
உக்ரைன் விமான எதிர்ப்பு கட்டமைப்பையும் அழித்துவிட்டதாக ரஷ்ய ராணுவம் தகவல் அளித்துள்ளது. உக்ரைன் நாட்டின் பல்வேறு விமான தளங்கள் மீது ரஷிய விமானங்கள் குண்டுமழை பொழிந்து தாக்குதல் புரிந்தது.
உக்ரைன் பெலாரஸை ஒட்டியுள்ள நகரங்களில் விமானத் தளங்களை மூடியது ரஷ்யா. உக்ரைன் விமானப்படையை முடக்கும் வகையில் தாக்குதல் நடத்துவதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டு ராணுவ விமான தளங்கள் தகர்த்து, முடக்கப்பட்டு விட்டதாகவும் ரஷ்ய ராணுவம் தகவல் அளித்துள்ளது.
