உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கிடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வந்தது. இதற்கு பல உலக நாடுகள் இரு நாடுகளுக்கிடையே போர் மூண்டால் பெரும் பொருளாதர சேதம் ஏற்படும் என எச்சரித்து வந்தனர்.
ஆனால் வரம்பு மீறிய ரஷ்யா பிப்ரவரி 24-ந் தேதியில் இருந்து உக்ரைன் மீது குண்டு மழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டில் பல அப்பாவி மக்கள் ரஷ்ய படைகளினால் கொன்று குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கார்கீவ் நகரை கைப்பற்றாமல் போனதால் வணிக நகரமாக மரியுபோல் நகரை கைப்பற்றுவதற்கு ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் சில நிமிடங்களுக்கு முன் மரியுபோல் நகரை கைப்பற்றுவதில் முழுவீச்சில் இறங்கி விட்டோம் இன்னும் சற்று நேரங்களில் அதனை கைப்பற்றி விடுவோம் என அறிவித்தனர்.
இந்த சூழலில் உக்ரைனின் மரியுபோல் நகரை கைப்பற்றியதாக ரஷ்ய ராணுவம் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் மரியுபோல் நகரை கைப்பற்றியதற்கு ரஷ்ய அதிபர் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது