Connect with us

உக்ரைனை ரஷ்யா தாக்கினால் பொருளாதார நிலை குலைந்து போகும்!: ஜி-7 நாடுகள் எச்சரிக்கை!

G7 Conference

செய்திகள்

உக்ரைனை ரஷ்யா தாக்கினால் பொருளாதார நிலை குலைந்து போகும்!: ஜி-7 நாடுகள் எச்சரிக்கை!

உக்ரைனை ரஷ்யா தாக்கினால் பொருளாதார நிலை குலைந்து போகும்!: ஜி-7 நாடுகள் எச்சரிக்கை!

சில நாட்களாக உக்ரைன்-ரஷ்யா விவகாரம் உலக நாடுகளையே உலுக்க வைத்துக் கொண்டுள்ளது. ஏனென்றால் ரஷ்யா தனது ராணுவ படையை உக்ரைன் எல்லைகளில் குவித்து வைத்துள்ளது.

இதனால் எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது ரஷ்யா போர் புரியும் என பல நாடுகள் கூறிக்கொண்டு வந்தன. அதுவும் குறிப்பாக உக்ரைன் விவகாரத்தில் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்காவின் எச்சரிக்கை தொடர்ந்து தற்போது ஜி7 நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக எழுந்துள்ளது.

அதன்படி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தினால் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று ஜி7 நாடுகள் எச்சரித்துள்ளது. கூட்டாக தடை விதிப்பதன் மூலம் ரஷ்யாவின் பொருளாதார நிலை குலைந்து போகும் என்பதையும் ஜி7 நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் உள்ளடக்கிய ஜி-7 நாடுகளின் அமைச்சர்கள் இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ளனர். உக்ரைனின் இறையாண்மை, எல்லை பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவை காக்க ஜி7  நாடுகள் உறுதி என அறிக்கையில் கூறியுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உறுதி கொள்வோம் என்று ஜி7 நாடுகள் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top