கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா உக்ரைன் நாட்டிற்கிடையே போர் தொடங்கியது. அன்று முதல் தற்போது வரை ரஷ்யாவுக்கும் உக்ரைன் நாட்டிற்கும் இடையே குண்டு மழை பெய்து கொண்டுதான் வருகிறது.
இதில் உக்ரைன் நாட்டின் பல பகுதிகளை ரஷ்யா ஒவ்வொன்றாக கைப்பற்றிக் கொண்டு வருகிறது. மேலும் அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து கொண்டு வந்தனர்.
அதோடு மட்டுமில்லாமல் மருத்துவமனை, பள்ளிகளிலும் ரஷ்யா விமானம் தாக்கியதாகவும் ஊடகங்கள் வாயிலாக தகவல் கிடைத்தது. இந்த நிலையில் ரஷ்யா தற்போது உக்ரைன் ரயில் நிலையத்தில் தாக்கியதாக தகவல் கிடைத்தது.
இதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதலில் பொதுமக்கள் 50 பேர் காயமடைந்ததாகவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தகவல் அளித்துள்ளார்.