செய்திகள்
மரியுபோல் நகரத்தில் போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா..!! பின்னணி என்ன?
பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்தார். அன்று முதல் 50 நாட்களை கடந்தும் உக்ரைன் மீது ரஷ்யா அதிதீவிரமாக போர் புரிந்து கொண்டு வருகிறது.
இதனால் பல இடங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி உள்ளதாக தெரிகிறது. அவற்றுள் ஒன்றுதான் மரியுபோல் நகரம். இந்த மரியுபோல் நகரத்தை முற்றிலுமாக ரஷ்ய ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
அதோடு மட்டுமில்லாமல் உக்ரேன் மக்கள் வெளியேற வரவேண்டுமென்றால் தங்களது கைகளில் வெள்ளைத் துணியை கட்டியவாறு வெளியேற வேண்டும் என்றும் அறிவித்து இருந்தனர். அதோடு மட்டுமில்லாமல் மரியுபோல் நகருக்குள் தங்களை மீறி ஒரு ஈ கூட முடியாத அளவிற்கு சுற்றிவளைத்து உள்ளதாகவும் எச்சரித்திருந்தனர்.
இந்த நிலையில் மரியுபோல் நகரத்தில் போரை நிறுத்துவதாக ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கியிருக்கும் மக்கள் வெளியேறுவதற்காக ரஷ்ய ராணுவம் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கியிருக்கும் மக்கள் ஆயிரம் பேர் பாதுகாப்பாக வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராணுவம் பாதுகாப்பான தொலைவிற்கு பின்நகர்த்தப்பட்டு இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.
