பண நெருக்கடியை தீர்க்கும் ருரு பைரவ மந்திரம்!

தற்போது கலியுகத்தில் பணமே எதற்கும் பிரதானமாக ஆகி வருவது மிகவும் வேதனையான விஷயமாகும். சண்டையால் பிரிந்த குடும்பங்கள், முறிந்த உறவுகள் எத்தனை எத்தனை?

பணம் இல்லாதோரை தற்போது சமுதாயத்திலும் மதிப்பது இல்லை. பணம் மீது சேர்ந்த ஆசையால் பணத்தை அபகரிப்பதற்காக சதிகள், வியாபாரக் கூட்டு முடிவு, கொலை, கொள்ளை, கையாடல், வன்முறை சம்பவங்கள், உறவு முறிவு, நட்பு முறிவு ஏற்பட்டு விடுகின்றன. எண் ஜான் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது போல பண ராஜ்யம் என்ற மாயையான தோற்றம் ஏற்பட்டு விட்டது.

இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் பின்வரும் மகேஸ்வரி சமேத ருரு பைரவர் மந்திரத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 108 முறை உங்கள் வீட்டு பூஜையறையில் ஜெபித்து வர வேண்டும். வெள்ளிக்கிழமையும் அனுஷ நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் இவ்வாறு ஜெபம் செய்யும் பொழுது அன்று மிகவும் அபரிதமான செல்வ வள சக்திகள் நமக்கு கிடைக்கின்றன.

வெள்ளிக்கிழமையும் அனுஷ நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் அமைந்துள்ள குளிகை காலத்தில் உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த மந்திரங்களை ஜெபித்து வரலாம். முடிந்தால் உங்கள் ஊரில் உள்ள பழமையான சிவன் கோயிலில் அமைந்திருக்கும் காலபைரவர் சன்னதியில் ஜெபம் செய்யலாம். பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்தவர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் அனுஷ நட்சத்திர நாளில் குளிகை காலத்தில் இந்த மந்திரத்தை காலபைரவர் சன்னதியில் 108 முறை ஜெபித்து வர வேண்டும்.

வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் வாழ்ந்து வருபவர்கள் அவர்கள் வீட்டு பூஜையறையில் குளிகை காலத்தில் அல்லது அதிகாலையில் அல்லது இரவு நேரத்தில் 108 முறை ஜெபித்து வர வேண்டும்.

உங்களுக்கு போதுமான அளவு வருமானம் வரும் வரை தொடர்ந்து ஜெபித்து வர வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு ஜெபம் செய்து வருவதற்கு முக்கிய கட்டுப்பாடு :-

ஒரு போதும் அசைவம் சாப்பிடக்கூடாது. ஒரு போதும் மது அருந்தக்கூடாது. ஒருபோதும் போதைப் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது.

நம்முடைய தமிழர் பண்பாடு என்பது ஜீவ காருண்யம் என்று சொல்லக்கூடிய சைவ உணவு பழக்கம் ஆகும்.

மகேஸ்வரி சமேத குரு பைரவர் மந்திரம்:

ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கீசாய தீமஹி
தன்னோ ருரு பைரவ ப்ரசோதயாத்

ஓம் விருஷப த்வஜாய வித்மஹே
மிருக ஹஸ்தாய தீமஹி
தன்னோ ரௌத்ரீ ப்ரசோதயாத்

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499

இதையும் பாருங்கள்:

தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய மந்திர வார்த்தைகள்!

அங்காள பரமேஸ்வரியின் அருளைத் தரும் இடியாப்ப சித்தர் மந்திரம்!

அத்தனை பிறவிகளையும் தீர்த்து அருளும் அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews