Connect with us

த்ரிஷாவை திருமணம் செய்கிறாரா சிம்பு? வதந்திக்கு ஒரு அளவு வேண்டாமா?

Entertainment

த்ரிஷாவை திருமணம் செய்கிறாரா சிம்பு? வதந்திக்கு ஒரு அளவு வேண்டாமா?

da34197fd4fac872d129abbdd5d5f7af

நடிகர் நடிகைகளின் காதல் குறித்தும், திருமணம் குறித்தும் அவ்வப்போது வதந்திகள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருப்பது வழக்கமான ஒன்றுதான். குறிப்பாக நடிகர் சிம்புவுடன் இணைத்து பல நடிகைகள் பேசப்பட்டார்கள் என்பதும் அவரது திருமணம் குறித்தும் அவ்வப்போது வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் இந்த வதந்திகளுக்கு அவ்வப்போது டி ராஜேந்தர் மறுப்பு தெரிவித்துள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சிம்புவும் திரிஷாவும் திருமணம் செய்யவிருப்பதாக யாரோ வதந்தியை கிளப்பி விட்டிருக்கிறார்கள். இது குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களிலும் ஒரு சில இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் ’கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தில் சிம்பு, திரிஷா ஆகிய இருவரும் இணைந்து நடித்தனர் என்பதும் விரைவில் ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

விண்ணை தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் கூட த்ரிஷாவை சிம்பு திருமணம் செய்ய முடியாத நிலையில் உண்மையில் எப்படி திருமணம் செய்ய முடியும்? என்று இந்த வதந்தி குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் சிம்பு தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் அளிக்கையில் இது முழுக்க முழுக்க வதந்தி என்று உறுதி செய்யப்பட்டுள்ளது

சிம்புவுடன் பல நடிகைகளை இணைத்து வதந்தி கிளப்புவது சகஜமான ஒன்று என்றாலும் த்ரிஷாவை திருமணம் செய்ய போவதாக யார் இந்த வதந்தியை கிளப்பி விட்டார்கள் என்பதே தெரியாததால் நெட்டிசன்கள் தற்போது குழப்பத்தில் உள்ளனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top