இரண்டு வாரங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாணவி ஒருவர் பள்ளியில் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு தற்கொலையா? கொலையா? என்பது பற்றி விசாரணை நடந்து கொண்டு வருகிறது. இதற்கிடையில் அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பள்ளி மாணவி மரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகள் மற்றும் தவறான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும் இதுபோன்று அனுப்பவர்கள் யாரென்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக ட்விட்டருக்கு போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் ட்விட்டருக்கு எழுதப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.
அதன்படி ட்விட்டரில் எந்த கணக்கில் இருந்து வதந்தி மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டன என்ற விவரங்களை தரக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளம் மூலம் 32 வகையான வசதிகள் பரப்பப்பட்டதாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் தகவல் அளித்துள்ளனர்.