ஆளுங்கட்சிக்கு எதிராக ஆளும் கட்சியினர் போராட்டம்…! நடந்த மிகப்பெரிய விபரீதம்?

இன்றைய தினம் ஆந்திராவில் புதிய அமைச்சரவை உருவானது. அதில் 25 எம்எல்ஏக்கள் புதியவர்களாக அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா இன்று முதல் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

இதனால் கடந்த வாரம் சுமார் 24 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் இன்று 12 புதிய அமைச்சர்களும் பதிமூன்று ஏற்கனவே அமைச்சர்களாக இருந்தவர்களும் பொறுப்பேற்றுள்ளனர்.

இதனால் ஆந்திராவில் ஆளுங்கட்சியின் எம்எல்ஏக்கள் ஒரு சிலர் அமைச்சர் அவர்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும் ஏமாற்றம் நிகழ்ந்தது. எனவே அந்த எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி ஆந்திர மாநிலம் அமராவதியில் ஆளுங்கட்சிக்கு எதிராக ஆளும் கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்திற்கு அவர்கள் தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் வேதனை என்னவென்றால் இருசக்கர வாகனத்தில் தீ வைக்கும் போது அந்த தீ போராட்டக்காரர்கள் மீது பரவியது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு சலசலப்பு உருவானது அதோடு மட்டுமில்லாமல் தீ வைத்த உடன் போராட்டக்காரர்கள் தீப்பற்றி உடன் தப்பி ஓடினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment