Connect with us

போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய ஆளுங்கட்சி எம்பி அடித்துக் கொலை…!!!

எம்பி அடித்துக் கொலை

News

போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்திய ஆளுங்கட்சி எம்பி அடித்துக் கொலை…!!!

இலங்கையில் தற்போது பதற்றமான நிலைமை நிலவுகிறது. ஏனென்றால் இன்றைய தினம் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பதவியை விலகினார். இதனால் ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் இலங்கையிலுள்ள பல பகுதிகளில் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை கலவரத்தில் ஆளுங்கட்சி எம்பி ஒருவர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் கலவரம் இன்னும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அதன்படி ராஜபக்சே ஆதரவாளர்கள் சென்ற வாகனத்தை மறித்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

போராட்டக்காரர்கள் ராஜபக்சே ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் ஆளும்கட்சி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்புவில் ராஜபக்சே ஆதரவாளர்கள் வந்த வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. தனது காரை மறித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது எம்பி அமர கீர்த்தி அதுகோரல துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

எம்பி அமர கீர்த்தி அதுகோரல துப்பாக்கிச்சூடு நடத்தியதால் ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top