Connect with us

செல்லப்பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த விதிகள் வகுக்க வேண்டும்!: ஐகோர்ட்

dog breeding

செய்திகள்

செல்லப்பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த விதிகள் வகுக்க வேண்டும்!: ஐகோர்ட்

செல்லப்பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த விதிகள் வகுக்க வேண்டும்!: ஐகோர்ட்

பொதுவாக நம் இல்லங்களில் செல்லப்பிராணிகளாக நாய், பூனைகளை வளர்ப்போம். அதிலும் தற்போது பலரும் வெளிநாட்டு ரக நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் செல்லப்பிராணிகள் வளர்ப்பு குறித்து விதிகள் வகுக்கப்பட வேண்டும் என்று ஹை கோர்ட் கூறியுள்ளது.

செல்லப்பிராணிகள் மற்றும் தெரு நாய்கள் வளர்ப்பதை முறைப்படுத்த விதிக்கப்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. செல்லப்பிராணிகள் வளர்ப்பு குறித்து விதிகளை வகுப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் விரும்புவதாக கூறியுள்ளது.

நாய்கள் முறையாக பராமரிக்கப்படுகிறது, பிற விலங்குகளை தாக்குவதால் தான் அடைத்து வைக்கிறோம் என்று ஐஐடி நிர்வாகம் கூறியுள்ளது. பிற நாட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது எப்படி முறைப் படுத்தப்படுகிறது என ஆய்வு செய்து விதிகளை வகுக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி வளாகத்தில் நாய்களை முறையாக பராமரிக்க கோரி கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு வழக்கு தொடுத்துள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் சுற்றி திரிந்த நாய்களை கூண்டில் அடைத்து வைத்த போது அவைகள் உயிர் இழந்ததும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top