
செய்திகள்
மும்பையில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம்-புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே!!
நேற்றைய தினம் மகாராஷ்டிரா மாநிலத்தில் சில முக்கிய அறிவிப்பு வெளியானது. ஏனென்றால் நேற்றைய தினத்திலேயே மகராஷ்டிரா மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி இன்று ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் ஏக்நாத் ஷிண்டே. மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக இன்றைய தினம் பதவி ஏற்று கொண்டார்.
மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் மகாராஷ்டிரா முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதலமைச்சராக இன்றைய தினம் பொறுப்பேற்றார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியை தழுவ முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மகராஷ்டிரா மாநில முதலமைச்சர் பால் தாக்கரே பெயரை குறிப்பிட்டு மராத்தி மொழியில் ஏக்நாத் சிண்டே முதலமைச்சராக பதவி ஏற்றார்.
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் பதவி ஏற்று கொண்டார். அமைச்சரவையில் இடம் பெற மாட்டேன் என பட்நாவிஸ் அறிவித்த நிலையில் பாஜக உத்தரவை ஏற்று இன்றைய தினம் பதவி ஏற்றார்.
