மெகாஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ குமார் இயக்கத்தில் உருவாகும் மாபெரும் ஆக்ஷன் என்டர்டெய்னர் படம் ஜவான். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் படத்தின் முதல் டீசர் மற்றும் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி, இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தின் ஷெட்யூல் தற்போழுது சென்னையின் நடைபெறுகிறது.
ஜவானில் நடிகை தீபிகா கேமியோவில் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது.சான்யா மல்ஹோத்ரா, ப்ரியாமணி, சுனில் குரோவர், யோகிபாபு ,நயன்தாரா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜவான் ஜூன் 2, 2023 அன்று ஐந்து மொழிகளில் ஷாருக்கானின் முதல் பான்-இந்தியா படமாக வெளியிடப்படும்.ஜவான் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் ,விஜய் சேதுபதிக்கு எதிரான பழிவாங்கும் கதையை ஷாருக் நடிப்பை வெளிப்படுத்துகிறார் மேலும் மூவரின் இயக்கவியலின் மீதியை திரைப்படத்தில் உருவாக்குகிறது. தீபிகா படுகோனே மற்றும் விஜய் சேதுபதி நேருக்கு நேர் நடக்கும் காட்சி அடுத்த சில நாட்களில் சென்னையில் படமாக்கப்படும் .
கார்த்தியின் விருமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தெரியுமா ? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !
அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஜூன் 2, 2023 அன்று திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. இந்தப் படத்தில் ஷாருக் ரா அதிகாரி தந்தையாகவும், கேங்ஸ்டர் மகனாகவும் நடிக்கிறார்.
இந்தப்படத்தில் நயன்தாரா சிறை கைதியாக நடித்து வருகிறார். ஷாருக்கான் தற்போது சென்னையில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.