Connect with us

ருத்ராஜ் ஆடிய ருத்ரதாண்டவம்: மும்பையை வீழ்த்தியது சி.எஸ்.கே!

Sports

ருத்ராஜ் ஆடிய ருத்ரதாண்டவம்: மும்பையை வீழ்த்தியது சி.எஸ்.கே!

8164a2594704fdeb6d65858153558d63

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் போட்டி, நேற்று மீண்டும் தொடங்கியது. நேற்றைய போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய நிலையில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்து 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. இதில் ருத்ராஜ் கெய்க்வாட் மட்டுமே 88 ரன்கள் எடுத்திருந்தார் என்பதும் இதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 157 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 136 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது என்பதும் ருத்ராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 12 புள்ளிகள் மற்றும் அதிக ரன் ரேட்  அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது என்பதும் டெல்லி அணி 12 புள்ளிகள் எடுத்திருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

நேற்றைய சென்னை அணியின் வெற்றியை சென்னை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்று கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top