தமிழகத்தில் அக்.2-ம் தேதிக்கு பதில் நவ.6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த பல்வேறு மாவட்டங்களில் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறிப்பாக சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்றத்தின் உத்தரவை அவமதிப்பதாக உள்ளது. இதன் காரணமாக நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தரப்பில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த வழக்கானது நீதிபதி இளந்திரையின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனுமதி மறுக்கப்பட்டதை காரணம் காட்டி பேரணிக்கு தடை விதிக்க கூடாது என தெரிவித்தார்.
அப்போது பேசிய நீதிபதி நவம்பர் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ்.பேரணிக்கு அனுமதி அளிப்பதாகவும், இதற்கு காவல்துறையினர் மறுத்தால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தார்.