மத மோதலை உருவாக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் முகாம்! உடனடியாக தடுக்க வலியுறுத்தல்: பாலகிருஷ்ணன்

நம் இந்திய நாடு ஒரு மதச்சார்பற்ற நாடாக காணப்படுகிறது. ஆனால் ஆங்காங்கே மதத்தின் சாயங்கள் பூசப்பட்டு கலவரங்கள் நடைபெறுகின்றன. ஆனாலும் நம் தமிழகத்தில் பெரிதான அளவிற்கு மதக்கலவரங்கள் நிகழவில்லை என்பது தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது. இந்த நிலையில் மத மோதலை உருவாக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் முகாம் நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.

அதன்படி கோவையில் பள்ளி ஒன்றில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

திட்டமிட்டு மத மோதலை உருவாக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் முகாம் நடத்துவதாக புகார் அளித்துள்ளார். பல்வேறு அமைப்பினர் காவல்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை துணை ஆணையரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பள்ளி வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து ரகளை செய்துள்ளனர். மத நிகழ்வுகளை கல்விக்கூடங்களில் நடத்த கூடாது என வலியுறுத்தி மாநகர காவல் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாரை மீறி ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்து பயிற்சி முகாமை நடத்தி வருகின்றனர். முகாமிற்கு அனுமதி அளித்த பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய விசாரணைக்கு உத்தரவிட பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment