ரேசன் கடையில் ரூ.4000: 3 மாதங்களில் வழங்கப்படும் என அறிவிப்பு!

4d64afc44b8b3ce0fefc545f2104660b

ரேஷன் கடைகளில் இன்னும் மூன்று மாதங்களில் ரூபாய் 4000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பு ஏற்றவுடன் நிவாரண நிதியாக ரூபாய் 4000 அறிவித்தார் என்பதும் இந்த தொகை இரண்டு தவணைகளாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணத்தை இன்னும் வாங்காதவர்கள் இந்த மாதத்திற்குள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் ரேஷன் அட்டைகள் இல்லாதவர்கள் மற்றும் அடையாள அட்டை இல்லாத திருநங்கையருக்கு நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையின் அடிப்படையில் தற்போது திருநங்கைகளுக்கும் ரூபாய் 4000 நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

இன்னும் மூன்று மாதத்தில் திருநங்கைகளுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அவர் அந்த பணத்தை பெறுவதற்கு எந்த விதமான அடையாள அட்டைகள் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திருநங்கைகள் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment