Tamil Nadu
அர்ச்சகர் உள்பட கோவில் நிர்வாகிகளுக்கு ரூ.4000 நிதியுதவி: அமைச்சர் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து அரிசி அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே ரூபாய் 2000 வழங்கப்பட்ட நிலையில் இந்த வாரம் மேலும் 2000 ரூபாய் வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் வருமானம் இன்றி இருக்கும் அர்ச்சகர்கள் உள்ளிட்ட கோவில் பணியாளர்களுக்கு ரூபாய் 4000 நிவாரண உதவி வழங்க இருப்பதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அறிவித்துள்ளார்
அர்ச்சகர்கள் உள்ளிட்ட கோவில் பணியாளர்களுக்கு ரூபாய் 4000 உதவித்தொகை மட்டுமின்றி 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்களும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்
இந்த திட்டம் ஜூன் மூன்றாம் தேதி தொடங்கி படிப்படியாக அனைத்து கோவில் பணியாளர்களுக்கும் வழங்கப் போவதாக அறிவித்துள்ளதை அடுத்து அர்ச்சகர்கள் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் தங்களது நன்றியை தமிழக அரசுக்கு தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
