தமிழகம்
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 விரைவில் அமல்: அமைச்சர் பெரியசாமி
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது திமுகவின் தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த திட்டம் பெண்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது என்பதும் அதனால் தான் பெண்கள் ஓட்டு திமுகவுக்கு ஒட்டுமொத்தமாக கிடைத்தது என்றும் கூறப்படுவதுண்டு
இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி ஏற்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில் இந்த திட்டம் குறித்து திமுக அரசு எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பது பெண்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்திற்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று கூறினார்
மேலும் மக்களின் நலனுக்காக ரூபாய் 4000 மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாநிலம் முழுவதும் 99% வழங்கப்பட்டு வழங்கப்பட்டு முடிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார் அமைச்சர் பெரியசாமி கூறியது போல் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டம் விரைவில் அமலாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
