திருப்பதி திருமலையில் வரலாறு காணாத மழை: ரூ.4 கோடி இழப்பு என தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் திருப்பதியில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதால் ரூபாய் 4 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

flood tirupathi 2திருப்பதி திருமலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக திருப்பதி கோவிலை சுற்றியும் தண்ணீர் தேங்கி உள்ளது என்பதும் இதனால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கடந்த 30 ஆண்டுகளில் திருப்பதி திருமலை கோவிலில் இது மாதிரி கனமழை பெய்தது இல்லை என்றும் இந்த கனமழையால் கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

flood tirupathi1இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கோவிலுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்தபோது ரூபாய் 4 கோடி மதிப்பிற்கு சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் திருப்பதி திருமலை கோவிலுக்கு வருவதற்காக ஏற்கனவே ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தவர்கள் கனமழை காரணமாக வரமுடியாத சூழல் ஏற்பட்டு இருந்தால் அதே டிக்கெட்டை வைத்து வேறொரு நாளில் தரிசனம் செய்து கொள்ளலாம் என திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment