Connect with us

பள்ளி மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.960 கோடி: அதிர்ச்சி தகவல்

News

பள்ளி மாணவர்களின் வங்கிக்கணக்கில் ரூ.960 கோடி: அதிர்ச்சி தகவல்

c8c3cbe1ae167ae398c3a9b4750391dd

பீகாரை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்களின் வங்கி கணக்கில் 960 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பீகாரை சேர்ந்த கதிஹார்மாவட்டத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பீகாரில் உள்ள வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ளனர். பள்ளி சீருடை வாங்கவும் பள்ளி கட்டணம் தொடர்பான செலவினங்களுக்காக அரசு திட்டத்தின் கீழ் உதவித் தொகை இந்த வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படும். அவர்களது வங்கி கணக்கில் பணம் ஏறி விட்டதா என்பதை அறிந்துகொள்ள தங்களது பெற்றோருடன் ஏடிஎம் செண்டருக்கு அந்த மாணவர்கள் சென்றனர் 

அப்போது அவர்களில் ஒரு மாணவரின் வங்கி கணக்கில் 900 கோடியும் இன்னொரு மாணவரின் வங்கி கணக்கில் 60 கோடியும் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அவரது பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த கிராமம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

இதனை அடுத்து வங்கி அதிகாரிகள் இது குறித்து கூறிய போது அந்த இரு மாணவர்களின் வங்கி கணக்கில் எப்படி இவ்வளவு தொகை வந்தது என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம். இது வங்கியின் கணினி செயல்பாட்டில் குறையாக பிழையாக இருக்கலாம் ஆனால் உண்மையில் அவர்களுடைய வங்கிக் கணக்கில் அந்த தொகை இல்லை என்று வங்கி மேலாளர் கூறியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top