Connect with us

வேலை வாங்கித் தருவதாக ரூ.70 லட்சம் மோசடி: அதிமுகவின் “முக்கிய புள்ளி “-யிடம் விசாரணை!!!

Capture 46

தமிழகம்

வேலை வாங்கித் தருவதாக ரூ.70 லட்சம் மோசடி: அதிமுகவின் “முக்கிய புள்ளி “-யிடம் விசாரணை!!!

பல்கலைகழகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறப்பட்ட புகாரில் விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் நல்லதம்பியின் உடன் பிறந்த சகோதரர் மற்றும் தற்போதைய அதிமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளராக இருக்கும் ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வள்ளி ஆகியோர் மீது புகார் ஒன்று கொடுக்கப்பட்டது இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையில் ரவிச்சந்திரன் மனைவி வள்ளி கொடைக்கானல் மதர் தெரசா பல்கலைகழகத்தில் துணைவேந்தராக இருந்துள்ளார்.

அப்போது தனது ஆதரவாளர்கள் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு பேராசிரியர் எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் வாங்கி தருவதாக சுமார் 70 லட்சம் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது நம்பிக்கை மோசடி, பண மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களிடன் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இவர்களின் மோசடி குறித்து பல்வேறு ஆதாரங்களை போலீசார் கைப்பற்றி வருவதாக கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top