Connect with us

’ரூ.70 கோடி மதிப்பில் நடமாடும் மருத்து வாகனம்’- தொடங்கி வைத்தார் முதல்வர் !!

மு க ஸ்டாலின்

தமிழகம்

’ரூ.70 கோடி மதிப்பில் நடமாடும் மருத்து வாகனம்’- தொடங்கி வைத்தார் முதல்வர் !!

’ரூ.70 கோடி மதிப்பில் நடமாடும் மருத்து வாகனம்’- தொடங்கி வைத்தார் முதல்வர் !!

நடமாடும் மருத்துவ சேவை திட்டத்தினை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் அதிகரிக்கக்கூடிய தொற்று நோய்களை கட்டுப்படுத்த மக்களை தேடி மருத்துவம் என்ற பெயரில் மாநகரம் முதல் மலை நகரம் வரை பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

இத்திட்டத்தின் அடுத்தப்படியாக கிராமங்களில் இல்லம் தேடி மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் 389 ஆம்புலனஸ் சிகிச்சை திட்டமானது இன்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் துவங்க இருக்கிறது.

இத்திட்டத்திற்கான துவக்க விழா சென்னை மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில் நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு களப்பணியாளர் என மருத்துவ துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டு மாதத்திற்கு 40 முகாம்கள் என்ற அடிப்படையில் இத்திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை சிகிச்சைகள் வழங்கவும் உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவ கல்லூரி சென்று அடுத்தக்கட்ட சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே இத்திட்டம் வாரத்தில் 6 நாட்கள் தொடங்கும் என்றும், இதில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பரிசோதனை மற்றும் இதர அத்தியாவசிய மருத்துவ சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top