பொங்கல் பரிசாக ரூ.5000 வழங்க வேண்டும் – இபிஎஸ் கோரிக்கை..!!

தமிழகத்தில் 2023-ம் ஆண்டு தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்கிட முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இத்திட்டத்திற்காக சுமார் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்க ரூ.2,356.67 கோடி ஒதுக்கி தமிழக அரசும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது.

சசிகலா புஷ்பா வீட்டின் மீது தாக்குதல்: திமுக கவுன்சிலர் கைது!!

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தைப்பொங்கல் தின பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் செங்கரும்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்..

இதனிடையே விவசாயிகள் தாங்கல் கொள்முதல் செய்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் தமிழக முதல்வர் பிறப்பித்த உத்தரவு விவசாயிகளை கலக்கமடைய செய்வதாக இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

மக்களே உஷார்! வரும் 25, 26ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு..!!

இதனால் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாக தெரிவித்து உள்ளார். மேலும், இதற்கான உத்தரவை உடனடியாக வெளியிட வேண்டும் என தமிழக முதல்வரை வலியுறுத்தி உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.