பறக்கும் படையினரின் அதிரடி ஆய்வில் ரூ 5 லட்சம் பறிமுதல்!!
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19- ஆம் தேதி நடைபெற இருப்பதால் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் விதத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி பறக்கும் படையினர் கலவை புறவழிச்சாலையில், இன்று வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது திமிரி பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தன்(வயது 48). இவர் அரிசி வியாபாரியாக உள்ளதாக தெரிகிறது.
இவர் ஆவணங்கள் ஏதும் இன்றி இருசக்கர வாகனத்தில் ஐந்து லட்சம் ரூபாயை வைத்திருந்ததை பறக்கும் படையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
