அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது
அரசு ஊழியர்கள் பணியின் போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தால் இதுவரை 3 லட்சம் அவர்களுடைய குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொகையை உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டு இதுவரை அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூபாய் 3 லட்சம் வழங்கப்பட்ட நிலையில் இனிமேல் 5 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து அரசு ஊழியர்கள் சங்கம் தமிழக அரசுக்கு தங்களது நன்றியை தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் செப்டம்பர் மாதம் முதல் அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதிக்காக அரசு ஊழியர்களிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் 110 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 60 ரூபாய் மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.