தமிழகத்தில் மான்டஸ் புயல் அதிரடியாக கரையை கடந்துள்ள நிலையில் தற்போது இந்த புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று கரையை கடந்த மாண்டஸ் புயல் பெரும் சேதங்களை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பாக மின்கம்பங்கள் விழுந்து கிடந்ததால் அதில் தெரியாமல் காலை வைத்து நான்கு பேர் வரை உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புயல் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். அதுமட்டுமின்றி புயலால் சேதமடைந்த பயிர்கள் கணக்கெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் புயலால் சேதமடைந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.