கர்நாடகவில் ரூ.375 கோடி பரிசுப்பொருட்கள் பறிமுதல்!

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரொக்க பண மற்றும் பரிசு பொருட்களை மதிப்பு 375 கோடி தாண்டி உள்ளதாக கூறப்படுகிறது .

124 தொகுதிகளில் கொண்ட கர்நாடக மாநிலத்திற்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது இதற்கான பரப்புரை நேற்று மாலை 6 மணிவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

அதை தொடர்ந்து கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணம் பரிசுப் பொருட்கள் விபரங்களை தேர்தல் பறக்கும் படையினர் வெளியிட்டுள்ளனர்.

147 கோடி 25 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் 83 கோடி மதிப்பிலான மதுபானங்கள் 23 கோடி மதிப்பிற்கும் போதை பொருட்கள் 96 கோடி மதிப்பு தங்கம் வெள்ளி நகைகள் என 375 கோடி மதிப்பிற்கும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

+2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி அறிவிப்பு

இந்த பறிமுதல் தொடர்பாக இதுவரை தேர்தல் ஆணையம் சார்பில் 2896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.கர்நாடகா மாநிலத்தில் ஒரே கட்டமாக மே 10-ம் தேதி வாக்குப்பதிவும், மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.