ஏழை டிரைவருக்கு திடீரென கிடைத்த ரூ.33 கோடி.. அவர் என்ன செய்தார் தெரியுமா?

துபாயில் நகைக்கடையில் டிரைவராக பணிபுரிந்து இந்தியர் ஒருவருக்கு 33 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவிலிருந்து துபாயில் உள்ள நகைகடைக்கு டிரைவர் வேலைக்கு சென்ற அஜய் என்பவர் மிகவும் வறுமையுடன் இருந்தார் என்றும் அவர் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக துபாய்க்கு வேலை சென்றால் வேலைக்கு சென்றார் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் டிரைவர் வேலை பார்க்கும் அஜய் தற்செயலாக ஒரு லாட்டரி சீட்டு வாங்கிய நிலையில் அந்த லாட்டரிச் இதற்கு 33 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக தெரிகிறது.

இதனை அடுத்து அந்த பணத்தை பெற்றுக்கொண்டு விரைவில் நாடு திரும்ப இருப்பதாகவும் அவர் தனது குடும்பத்திற்கு செலவு செய்தது போக மீத தொகையை ஒரு அறக்கட்டளை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த அறக்கட்டளை மூலம் தனது கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடிவு செய்து இருப்பதாக அஜய் தெரிவித்துள்ளார். தனது குடும்பம் உற்றார் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவருக்கும் உதவி செய்ய இருப்பதாக அவர் கூறியதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.