Connect with us

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை – அரவிந்த் கெஜ்ரிவால்!!

Capture 2

செய்திகள்

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 உதவித்தொகை – அரவிந்த் கெஜ்ரிவால்!!

பாஜக ஆட்சிசெய்யும் குஜராத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஆட்சியை கைப்பற்ற பாஜக – ஆம் ஆத்மி கட்சியினர் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பேசிய கெஜ்ரிவால் ஆம் ஆத்மி வெற்றிபெற்றால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவதாகவும், வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

அதே போல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை தக்கவைத்தால் வேலை இல்லாத இளைஞர்களுக்கு 10 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

தற்போது குஜராத் மாநிலத்தில் பாஜக மின்சாரம், பள்ளி, வேலைகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பஞ்சாப்பில் ஆட்சி அமைத்தது போல் குஜராத்திலும் ஆட்சி அமைந்தால் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு சலுகைகள் அதிகமாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top