இந்த ஆண்டு பொங்கல் பரிசு ரூ.3000 தரப்படுகிறதா? பரபரப்பு தகவல்!

கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக பணம் எதுவும் தரப்படவில்லை என்றும் பொருட்கள் மட்டுமே தரப்பட்டது என்பதும் அந்த பொருட்கள் கூட தரம் குறைவாக இருந்ததாக குற்றச்சாட்டு இருந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் தர வாய்ப்பு இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பொங்கல் பரிசாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் தர வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு தரமற்ற பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டு பொது மக்களை ஏமாற்றிய திமுக அரசு இந்த ஆண்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக 3000 ரூபாய் தர வேண்டும் என்றும் அவ்வாறு தந்தால் முறைகேடுகளுக்கு முடிவு கட்டப்படும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கு மக்கள் தரப்பில் பெரும் வரவேற்பு இருந்து வரும் நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பரிசாக மூவாயிரம் ரூபாய் ரொக்கமாக தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.