ஜனவரி மாத ரூ.300 சிறப்பு தரிசனம் டிக்கெட் எப்போது கிடைக்கும்: தேவஸ்தானம் அறிவிப்பு

ஒவ்வொரு மாதமும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான இலவச டிக்கெட் மற்றும் ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட்டை வெளியிட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே.

கடந்த சில வாரங்களாக இந்த டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜனவரி 1 முதல் ஜனவரி 11ஆம் தேதி வரையிலான டிக்கெட்டுகள் இன்று முதல் கிடைக்கும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இன்று காலை 9 மணிக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஜனவரி 1 முதல் ஜனவரி 11 ஆம் தேதி வரையிலான டிக்கெட்டுகளை இன்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 12 முதலான டிக்கெட்டுகள் விற்பனை செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.