மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள்,வடிகால்களை சீரமைக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய வடகிழக்கு பருவமழை அதிதீவிரமாக தமிழகம் பக்கமாக மழையை கொடுத்தது. இதன் விளைவாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களை நீருக்குள் மூழ்கியது.

தேங்கிய மழைநீர்

அனைத்து அணைகளும் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. மழைக்காலம் தொடங்கினால் போக்குவரத்து இடைஞ்சல் ,சாலைகளில் மழைநீர் தேக்கம் என பலவும் உருவாகும். இதனால் சாலைகள் சேதமடையும்.

வடிகால்கள்,சாலை

குறிப்பாக சில நாட்களாக பெய்த கனமழையால் சென்னை மாநகரத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள், பாலங்கள் என அனைத்தும் பழுதடைந்தன. இதுகுறித்து தமிழக அரசு சாலைகளை சீரமைக்க அமைப்பது பற்றி சில முக்கிய அறிவிப்புகளை கூறியுள்ளது.

அதன்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த சாலைகள், பாலங்கள்,வடிகால்கள் போன்றவற்றை சீரமைக்க ரூபாய் 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்களுக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் வரிசையாக தற்போது வடிகால்கள்,சாலைகளை சீரமைக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print