Connect with us

ஒவ்வொரு தமிழர் மீது ரூ.2.63 லட்சம் கடன்: வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

Tamil Nadu

ஒவ்வொரு தமிழர் மீது ரூ.2.63 லட்சம் கடன்: வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

88a442cb20cc6d62d19a59d41e37bc84

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினர் மீதும் 2.63 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக சற்று முன் வெளியான வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சற்றுமுன் வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்தார். 20 ஆண்டுகளுக்குப்பின் சமர்ப்பிக்கப்படும் வெள்ளை அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் உள்ளன

இந்த தகவலின் படி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலையில் ரூபாய் 2.63 லட்சம் கடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் தற்போதைய மொத்த கடன் 5.70 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடைசி ஐந்து ஆண்டுகளில் அதிமுக அரசின் வருவாய் பற்றாக்குறை ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளதாகவும்,. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.39,079 கோடி மறைமுக கடன் என்றும், 2020-21ல் மட்டும் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடி என்றும், அரசின் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை அதிமுக ஆட்சியில் இருந்தது என்றும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top