சினிமா பட பாணியில் ரூ.25 கோடி கடத்தல்: போலீசார் விசாரணை!!

குஜராத் மாநிலம் சூரத்தில் ஆம்புலன்ஸ் மூலமாக கடத்த முயன்ற ரூ.25 கோடி ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சூரத்தில் உள்ள மர்ம நபர் ஒருவர் ஆம்புலன்ஸ் ஒன்றில் ரூ.25 கோடி கடத்தப்படுவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் கூறிய இடத்திற்கு சென்ற போலீசார் அகமதாபாத் – மும்பை சாலையில் காத்து கொண்டிருந்தனர்.

அப்போது மிக வேகமாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் சோதனை மேற்கொண்டனர். அதில் 6 பெட்டிகளில் கட்டுக் கட்டாக பணம் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

அதில் ரூ.25 கோடியே 80 லட்சம் ரூபாய் பணம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த பணம் ஹவாலா பணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் தெலுங்கானா மாநிலத்திற்கு கொண்டுச்செல்லப்பட்ட 1 கோடி 24 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் ஒருவர் கைதான நிலையில் அவரிடம் எந்த ஆவணமும் இல்லையென்பதால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment