Connect with us

காற்றின் தரத்தை மேம்படுத்த ரூ.233 கோடி ஒதுக்கீடு!! ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு..

காற்று மாசு

செய்திகள்

காற்றின் தரத்தை மேம்படுத்த ரூ.233 கோடி ஒதுக்கீடு!! ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு..

காற்றின் தரத்தை மேம்படுத்த ரூ.233 கோடி ஒதுக்கீடு!! ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு..

நகர்புறங்களில் பெருகிவரும் தொழிற்சாலைகள்  அதிகரிப்பதன் காரணமாக,   வெளியேறும் வாயுக் கழிவுகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் தமிழகம் அதிக படியாக மாசடைகிறது.

இந்நிலையில் தேசிய தூய்மை காற்று திட்டத்தில் கீழ் டில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில் காற்று மாசுப்பாட்டை குறைப்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

அந்த வகையில் தமிழகத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப் படுகின்றனர். இதனிடையே தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு சுமார் ரூ. 233 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே அறிவித்துள்ளார்.

அதன்படி, சென்னை ரூ.181 கோடியும், மதுரை ரூ.31 கோடியும், திருச்சி ரூ.21 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் காற்றின் தரத்தத்தை அதிகரிக்கவும், மாசுப்பாட்டை குறைப்பதற்காக மட்டுமே இத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top