BREAKING: டெல்லியில் பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை!!

டெல்லியில் பட்டாசு வாங்கினாலோ, வெடித்தாலோ ரூ200 அபராதம், 6 மாதம் சிறை என்றும் பட்டாசு தயாரித்தாலோ, விற்றாலோ ரூ. 5,000 அபராதம் 3 வருடம் சிறை என சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியை பொருத்தவரையில் காற்று மாசுபாடு என்பது மற்ற மாநிலங்களை விட அதிகமாக காண்ணப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்திருந்தது.

தூக்குக்குடி துப்பாக்கி சூடு.. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் – முதல்வர் திட்டவட்டம்!!

குறிப்பாக அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதி வரையில் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் அம்மாநில அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன் படி, தனிநபர் பட்டாசு வாங்கினாலோ, வெடித்தாலோ அவருக்கு ரூ. 200 அபராதம் மற்றும் 6 மாதம் சிறை தண்டனை என தெரிவித்துள்ளார்.

அதே போல் சட்டவிரோதமாக பட்டாசுகளை குடோன்களில் தயாரித்தாலோ, விற்றாலோ ரூ. 5,000 அபராதம் என்றும் 3 வருடம் சிறை என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை அப்டேட்!!

மேலும், 408 குழுக்கள் டெல்லியில் பட்டாசு தடையை செயல்படுத்த அமைக்கப்பட்டுள்ளதாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment