தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் ஒரு பக்கம் ரூபாய் 200 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்து விட்டதாக டிரெண்ட் ஆகி கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் சென்னையின் முக்கிய திரையரங்கில் ஒரு டிக்கெட் கூட விற்பனை ஆகாததால் காட்சி ரத்து என்ற தகவல் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி வெளியாகி முதல் ஐந்து நாட்களில் அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது என்பது உண்மைதான். ஆனால் ஜனவரி 18ஆம் தேதி முதல் கூட்டம் குறைய தொடங்கியது. 20ஆம் தேதிக்கு முன்னர் 25 சதவீத டிக்கெட்டுகள் கூட விற்பனையாகவில்லை என்று பல திரையரங்குகளில் இருந்து தகவல்கள் வெளிவந்தன
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘மாஸ்டர்’ திரைப்படம் 100 கோடி வசூல் செய்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படம் 200 கோடி வசூல் செய்து விட்டதாக சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது
இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள முக்கிய திரையரங்கில் இன்றைய பகல் காட்சிகள் கூட்டம் வராததால் ரத்து செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. ஒருபக்கம் இருநூறு கோடி ஒரு பக்கம் காட்சி ரத்து என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது
அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் இன்னும் பல இடங்களில் லாக்டவுன் இருக்கும் நேரத்தில் பல நகரங்களில் திரையரங்குகளில் திறக்கவில்லை என்ற நிலையில் மாஸ்டர் திரைப்படம் 200 கோடி வசூல் என்பது அதிகாரபூர்வமற்ற தகவல் என்றும் இந்த படத்தின் உண்மையான வசூல் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும் என்றும் அவர் வாயைத் திறந்து இந்த படத்தின் வசூல் எவ்வளவு என்று கூறும் வரையில் வெளிவந்து கொண்டிருக்கும் அத்தனை தகவல்களும் அதிகாரபூர்வ மற்றவை என்றும் திரையுலக ஜாம்பவான்கள் கூறி வருகின்றனர்