Connect with us

அட்ராசக்க..!! ரூ.13 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு!!

loan

செய்திகள்

அட்ராசக்க..!! ரூ.13 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு!!

புதுச்சேரியில் விவசாயக் கடன் ரூ.13 கோடி தள்ளுபடி செய்யப்படும்  என  சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி  கூறியுள்ளார்.

புதுச்சேரியில் கடந்த மாதம் ஆகஸ்ட் 26-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது. அப்போது அம்மாநில முதல்வர் ரங்கசாமி 9 ஆயிரது 924 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார்.

அதோடு பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். குறிப்பாக ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பாட்கோவில் மாணவர்கள் பெற்ற கடன்கள் ரத்து செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருந்தார்.

அதே போல், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என அறிவித்திருந்தார். தற்போது சுமார் ரூ.13 கோடி கடன் ரத்து செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top