சென்னையில் ரூ.102, பல பகுதிகளில் ரூ.103: உச்சம் சென்ற பெட்ரோல் விலை

dfceb48e2c11c1749afdd9d4fb0de021

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 102ஐ தாண்டி உள்ளது என்பதும் தமிழகத்தின் பல பகுதிகளில் 103 ரூபாயை தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து தற்போது பார்ப்போம்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.23 என்ற விலையில் விற்பனையாகிற்து. அதேபோல் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.39 என்ற விலையில் விற்பனையாகிறது.

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை 102 மற்றும் 103ஐ தாண்டி உள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடமிருந்து எழுந்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment