Connect with us

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை: வெளியானது அதிரடி அப்டேட்!!

new colleges

தமிழகம்

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை: வெளியானது அதிரடி அப்டேட்!!

தமிழகத்தின் நடப்பாண்டு பட்ஜெட்டில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு  மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 6 லட்சம் மாணவிகள் பயன்பெறும் வகையில் நடப்பாண்டுக்கு மட்டும் ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன் அரசாணை வெளியிடப்பட்டு இருந்தது.

இதற்காக மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முதன்மைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.

இந்த சூழலில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி அளிக்கும் திட்டம் செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top