மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை எப்போது?… நிதி அமைச்சர் பிடிஆர் அதிரடி தகவல்!

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு ஒன் சைடு கேம் விளையாடுவதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே எனத் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிததிற்கும் உச்சநீதிமன்றம் வழக்கிற்கும் முரண்பாடு உள்ளதை சுட்டிக்காட்டினார்.

ஒன்றாக அறிவித்த இரண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பிலாஸ்பூர் எய்ம்ஸ் 95% நிறைவு பெற்றுள்ளது. ஆனால் மதுரையில் செங்கல் மட்டுமே உள்ளது. எய்ம்ஸ் விவகாரத்தில் மத்திய அரசு ஒன் சைட் கேம் விளையாடுவது போல் தெரிகிறது ஒன்றிய அரசு பணத்தை வைத்து அரசியல் செய்கிறது எனக்குற்றச்சாட்டினார்.

குடும்ப மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிடிஆர், மகளிருக்கான உரிமை தொகை வழங்குவது குறித்து அண்டை மாநிலங்களில் நடைமுறை சாத்தியம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும்,

மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான அனைத்து வகையிலும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

மத்திய அரசு திட்டங்களுக்கான நிதியை குறைவாக வழங்குவதாக குற்றச்சாட்டிய அவர், 75 சதவீதம் வரையிலான நிதியை மாநில அரசுகள் வழங்கினாலும் அத்திட்டத்திற்கு பிரதமரின் பெயரைச் சூட்டுவது ஏற்புடையது அல்ல எனத் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment