அடி தூள்!! மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவிதொகை வழங்கும் திட்டம்: எப்போது தெரியுமா?

அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படுவதாக தமிழக அரசு நடப்பாண்டு பட்ஜெட்டில் தெரிவித்திருந்தது.

அதன் படி, மாணவிகள் கல்லூரி அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு உள்ளிட்டவைகளை சமூக நலத்துறை இணையத்தில் சேகரிக்க தொடங்கி நிலையில், இத்தகைய திட்டமானது எப்போது நடைமுறைக்கு வரும் என்று மாணவிகளுக்கு மத்தியில் கேள்வி எழுந்தது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தற்போது தமிழகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 5-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே போல் உதவிதொகை வழங்கும் திட்டத்திற்கு 90 ஆயிரம் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தொடக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment