Connect with us

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1,000: அறிவிப்பு எப்போது?

Tamil Nadu

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1,000: அறிவிப்பு எப்போது?

abd5fdbbcaa5f1c911882177e024693c

தமிழகத்தில் திமுக ஆட்சி வந்தவுடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பாக மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். 

அந்த வகையில் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட அறிவிப்புகளில் ஒன்று இல்லத்தரசிகளுக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது எப்போது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்து வந்தன.

இந்த நிலையில் குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பு வரும் சுதந்திர தினத்தன்று வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னை செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பின் உரையாற்ற உள்ளார். அந்த உரையில் அவர் இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் என்ற அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த நிலையில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 1000 திட்டத்தை பெற வேண்டுமானால் இல்லத்தரசியின் பெயர் குடும்ப தலைவியாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருவதால் பலர் பெயர் மாற்றம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top