உயர்கல்வி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பம் செய்வதற்கு நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் அன்மையில் உயர்கல்வி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பெறும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு ஜுன் மாதம் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதற்காக மாணவிகளின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு, மதிப்பெண் சான்றுதல் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சமூக நலத்துறை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பல்வேறு இடங்களில் இணையதள பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஜூலை 10-ம் தேதி வரையில் அவகாசம் நீட்டித்தது.

இந்த சூழலில் மாணவிகள் மாதம் ஆயிரம் பெற விண்ணப்பம் செய்வதற்கு நாளையோடு கால அவகாசம் முடிவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment