
Tamil Nadu
கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 : வெளியானது அதிரடி அப்டேட்!!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக நகை கடன் தள்ளுபடி செய்தல், பயிர் கடன் தள்ளுபடி செய்தல்,மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்தல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை அரசு செய்துள்ளது.
இந்நிலையில் தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு பதிலாக அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார்.
அதோடு இந்தத் திட்டம் காமராஜர் பிறந்தநாள் தினத்தில் செயல்படுத்த படுவதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது. இந்த சூழலில் அரசு பள்ளிகளில் படித்து தற்போது பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த திட்டத்திற்கு தகுதியான மாணவியரிடம் இருந்து சான்றிதழ்கள் மற்றும் பாஸ்புக் எண்களை சேகரிக்க அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், தமிழக அரசின் இத்தகைய அறிவிப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
