Connect with us

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000: தமிழக அரசு அரசாணை வெளியீடு!!!

தமிழக அரசு

தமிழகம்

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000: தமிழக அரசு அரசாணை வெளியீடு!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி இதனை நடைமுறைப்படுத்துகிறது.

அந்த வகையில் நடப்பாண்டு பட்ஜெட்டில்  அரசு பள்ளிகளில் படித்து உயர்க்கல்வி செல்லும்   மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்திற்காக தமிழகத்தில் கிட்டத்தட்ட 15 லட்சம் மாணவிகள் கடந்த சில தினங்களுக்கு முன் விண்ணப்பித்து இருந்தனர்.

இருப்பினும் இத்தகைய திட்டமானது எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்று கேள்வி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்தது. இந்த சூழலில் தமிழக அரசு சார்பில் அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதன் படி, அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டமானது, ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதி மாணவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அதற்கான அரசாணையும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இதற்காக சுமார் ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்து தற்போது தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top