தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் எப்போது தொடங்கப்படும் என தமிழக மக்களிடையே நீண்ட எதிர்ப்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் தமிழ்நாடு பட்ஜெட்டில் இதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘மகளிர் உரிமைத்தொகை’ தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும் என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும் என்றும், இதற்காக 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நாட்டிலேயே நேரடி மானியமாக அதிக நிதி வழங்கக்கூடிய திட்டமாக மகளிர் உரிமைத்தொகை திட்டம் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டமும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.