ரேஷனில் ரூ1000: மீண்டும் தமிழக அரசின் அறிவிப்பு!

bb0eff477cf41b9980d976bed7693ee2

தமிழக அரசு ஏற்கனவே அரிசி அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கி உள்ளது என்பதும் இரண்டு தவணைகளாக இந்த பணம் வழங்கப்பட்டது என்பதும் அதுமட்டுமின்றி 14 வகை மளிகை பொருட்களும் வழங்கப்பட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது தமிழக அரசு மீண்டும் குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளது. PHH, PHH-AAY, NPHH ஆகிய ரேஷன் அட்டைதாரர்களின் குடும்பத்தலைவிகளுக்கு மட்டும் ரூ.1000 கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மேற்கண்ட மூன்று வகையான குடும்ப அட்டைகளில் உள்ள குடும்ப தலைவியின் பெயரில் இருந்தால் மட்டுமே ரூபாய் 1000 ரூபாய் உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றவர்கள் தேவை இன்றி ரேஷன் அட்டைகளில் மாற்றம் செய்ய வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 

திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு குடும்பத் தலைவிகளூக்கு ஆயிரம் ரூபாய் அறிவிக்கும் திட்டத்தை விரைவில் அறிவிக்க உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment