கனமழை! பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1,000 – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் கடந்த 10,11-ம் தேதிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அதிகளவு வீடுகள் மற்றும் விளைநிலங்கள் பாதிப்படைந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக முதல்வர் அப்பகுதிகளை பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தார். அப்போது அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி மற்றும் கரகம்பாடி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த சூழலில் இதற்கான அரசாணையானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1,000 வழங்க படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சுமார் ரூ.16.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இதன் மூலம் சீர்காழியில் 99518 குடும்பங்கள், ரங்கம்பாடியில் 62129 குடும்ப அட்டைதாரர்களு ரூ. 1000 நிவாரணத்தொகை வழங்கப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.